Thursday, December 23, 2010

Leaving Las vegas (1995)

Leaving Las vegas (1995)
Mike Figgis இயக்கி 1995 -ல் வந்து ஆஸ்கார் உட்பட பல விருதுகள் பெற்ற படம்.
பள்ளிக்கூட நாட்களில் இந்த படத்தின் விளம்பரத்தை Star  Movies -ல் பார்த்தபோது எதோ பலான படம் என்று நினைத்திருந்தேன்.
அப்போ அதை பார்க்க முடியவில்லை (ரொம்ப நல்லவனா
இருந்துருக்கேன், ஒரு காலத்துல). சில வாரங்களுக்கு முன்பு Netflix -ல் மேய்ந்த போது இப்படம் கண்ணில்பட்டது.  குறுவட்டு வந்ததும் பார்த்தேன். அசந்து விட்டேன். அருமையான படம்.

கதை
பென் (நிகோலஸ் கேஜ்) ஒரு மோடா குடிகாரன்.  குடியால் தன் மனைவி,குழந்தைகளை விட்டு பிரிந்தவன். கடைசியாக குடியால் தான் பார்த்த திரைக்கதை ஆசிரியர்  வேலையும் போய் விடுகிறது. மீதி சம்பளத்தை தந்துவிட்டு முதலாளி கேட்கிறார் 'இனி என்ன பண்ண போற?'. யோசித்து விட்டு பென் சொல்லும் பதில் "லாஸ் வேகஸ் போக போறேன்." (லாஸ் வேகஸ் பற்றி தெரியாதவர்களுக்கு அது ஒரு உல்லாச உலகம். முழுக்க முழுக்க மது, மாது, சூது.) ஆனால் பென் போவது அதற்காக இல்லை, குடித்து குடித்தே தற்கொலை செய்வதற்காக.


சாரா (எலிசபெத் ஷு) வேகஸ்-ல் ஒரு பாலியல் தொழிலாளி. ஒருவனின் கட்டுபாட்டில் வேலை பார்க்கிறாள். சாரா குறைவாக சம்பாதித்தால் அடி, உதை இலவசம்.


தலைவர் ஒரு நாள் வண்டி ஓட்டும் போது, சாரா சாலைய கடக்க  முயல, இருவரும் சந்திகிறார்கள். அவளை தன் விடுதிக்கு அழைத்து வருகிறான். அவள் குளித்து விட்டு தயாராக, பென் சொல்கிறான் 'நீ   ஒன்னும் செய்ய வேண்டாம், என்னோட பேசிட்டு இரு, அப்பறமா  தூங்கு' (அடப்பாவி). அவளுக்கு அந்த இரவு பிடித்து போகிறது. காலையில் பிரிகிறார்கள்.


எதுவும்  சம்பாதிக்காததால்  சாராவுக்கு உதை விழுகிறது.  அடுத்த நாள் மீண்டும் சந்திகிறார்கள். நெருக்கம் உண்டாகிறது. சாரா தன் வேலையே
செய்ய முடியாமல் தவிக்கிறாள். பென், குடித்து குடித்து சாவை நோக்கி போய் கொண்டு இருக்கிறான்.


சாராவின் முதலாளியேய்  அவன் எதிரிகள் கொன்று விட, சாரா விடுதலை பறவையாகிறாள்.  பென்னை தேடி கண்டு பிடிக்கிறாள். தன்னுடன் வந்து தங்கி கொள்ளுமாறு சொல்கிறாள். பென் சொல்கிறான் 'சரி. ஆனா எக்காரணத்த கொண்டும் என்னைய குடிக்ககூடாதுனு சொல்லக் கூடாது'. அவள் சம்மதிக்கிறாள்.


நாட்கள் செல்ல செல்ல சாராவுக்கு அவனை பிடித்து போகிறது. ஆனால்
அவன் உடல் நிலை மோசமாகிக்  கொண்டே போகிறது. சாரா அவனை காப்பாற்ற நினைக்கிறாள். ஆனால் அவனுக்கு தான் அது பிடிக்காதே என்ன செய்ய. அவனுக்கு தெரியாமலே அவனின் கவனத்தை  மாற்ற பார்க்கிறாள்.  இரவு விடுதிக்கு அழைத்து போகிறாள். அவன் நன்றாக குடித்து விட்டு சண்டை போடுகிறான். காவலர்கள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார்கள்.  


ஒரு பெக் வங்கி அவனுக்கு பரிசளிக்கிறாள். அப்போதாவது அவன் குறைவாக குடிப்பானா என பார்க்கிறாள். பலன் இல்லை. சாரா அவனை இழக்கமுடியாத நிலைக்கு போகிறாள். ஆனால் அதை சொல்லவும் முடியாமல், ஒன்னும் செய்யவும் முடியாமல் தவிக்கிறாள்.


பென்னின் உடல் நிலை மிகவும் மோசமாகிறது. ரத்த வாந்தி எடுக்கிறான். சாரா தன்னை கட்டு படுத்த முடியாமல் அவனை மருத்துவரிடம் வருமாறு அழைக்கிறாள். அவள் தன்னை மாற்ற நினைப்பது பிடிக்காமல் மறுக்கிறான். தான் இந்த வீட்டை விட்டு போவதற்கான  நேரம்   வந்து விட்டதாக சொல்கிறான்.  சாரா இனி நான் உன்னை கட்டுப்படத்த மாட்டேன், என்னை விட்டு போகாதே என கெஞ்சுகிறாள்.


ஒரு நாள் பென் வேண்டுமென்றே ஒரு பாலியல் தொழிலாளியை வீட்டுக்கு கூட்டி வந்து கலவி கொள்கிறான். சாரா வெளியே சென்று வரும் போது அதை பார்த்ததும் கோபம் வருகிறது. அவனை திட்டி விடுகிறாள். பென் அவளிடம் சொல்லாமல் வீட்டை விட்டு  சென்று விடுகிறான். சாரா அவனை காணாமல் தவிக்கிறாள். அவன் இறப்பதற்குள் பார்க்க வேண்டும் என தேடி அழைக்கிறாள். பிறகு என்ன?


அந்த கவிதையான முடிவை திரையில் பாருங்கள்.


படத்தின் சிறப்பு
  •  Mike பிக்கிஸ்- ன்  கட்டி போடும் திரைக்கதை.
  •  நிகோலஸ் கேஜ் பென்னாக பின்னி இருப்பார். எப்போதும்  போதையிலேயே  இருப்பது போலவே 
         அவரது நடை உடை பாவனை இருக்கும்.
         ரொம்ப பார்த்தா நமக்கே போதை ஏறும், அப்படி இருப்பார்.
         இப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது
         இவருக்கு கிடைத்தது.
  •  படத்தின் கண்டிப்பாக விஞ்சி நிற்பது சாராவாக வரும் எலிசபெத் ஷு. பென்னை காப்பாற்ற நினைத்து அதை சொல்லமுடியாமல் தவிக்கும் இடங்களில் கலக்கி இருப்பார். இப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான  ஆஸ்கர் விருது பரிந்துரை  இவருக்கு கிடைத்தது.
  •  படத்தில் பின்னணி இசை எப்போ வருகிறது போகிறது என்றே தெரியாது. ஆனால் நமக்குள் ஊடுருவும். 
  • படம் முழுவதும் வரும் ஒரு விதமான warm lighting. 
                                                                                     - இளங்கன்று